சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜி நியமனம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

2018 ஆண்டுக்கான இந்திய பிரிமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டிகளில் 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் 8 தொடர்களில் விளையாடிய மகேந்திரசிங் டோனி, சுரேஸ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் தொடர்ச்சியாக தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்