கோஹ்லி மூஞ்சியில் கரியை பூசாமவிடமாட்டோம்: தென் ஆப்பிரிக்கா வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

வரலாறு படைக்கும் எண்ணத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு வந்த கோஹ்லியை வெறும் கையுடன் அனுப்பி, கரியை பூச விரும்புவதாக தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளார் ரபாடா கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன.

அந்த இரண்டு போட்டிகளிலுமே தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையில் இரண்டாவாது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின்னர் கோஹ்லியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட போது, கோஹ்லி ஆத்திரப்பட்டது பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கசிகா ரபாடா கூறுகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

இத்தொடரை பொறுத்த வரையில் முழுமையாக கைப்பற்றி, வரலாறு படைக்கும் எண்ணத்தில் வந்த கோஹ்லியை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பி கரியை பூச விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்