விக்கெட் கீப்பிங் பற்றி டோனியின் அசத்தல் விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, சிறந்த விக்கெட் கீப்பராக தான் மாறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

டோனி, வழக்கமான விக்கெட் கீப்பர்கள் போல அல்லாமல், வித்தியாசமாக செயல்படுபவர்.

சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் பெரும்பாலான வெற்றிக்கு விக்கெட் கீப்பராக டோனி செயல்பட்டதும் ஒரு காரணம்.

இதுகுறித்து டோனி கூறுகையில், நான் வழக்கத்திற்கு விரோதமான ஸ்டைலில் செயல்படுவதே எனது வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன்.

நான் ஐபிஎல் போட்டிகளின் பயிற்சியின்போது Keeping Practice செய்ய மாட்டேன். அதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூட என்னிடம் கேட்பார்.

ஆனால் கடந்த 9 ஆண்டுகால ஐபிஎல் அனுபவத்தில், ஒருமுறை கூட நான் பயிற்சி செய்தது இல்லை.

உண்மையில் விக்கெட் கீப்பிங் என்பது மைதானத்தில் பயிற்சி செய்து வருவதில்லை, மனசுக்கு தான் பயிற்சி தேவை.

சில விக்கெட் கீப்பர்கள் மைதானத்தில் மிகவும் சிரமப்பட்டு பயிற்சி செய்வார்கள், அதெல்லாம் தேவையே இல்லை, நூறு பந்துகளைக் கூடத் தவற விடலாம், அது தப்பில்லை.

ஆனால், சரியான பந்து வரும்போது பிடிக்காமல் விடக் கூடாது. அதுதான் ஒரு கீப்பருக்கு மிக முக்கியம். Stumping வாய்ப்பு கிடைக்கும் போது, அதனை சரியாக செய்ய வேண்டும்.

Catches-ஐ விடக் கூடாது, கீப்பர் எப்படிப்பட்டவர் என்பது முக்கியமில்லை, அவர் மோசமான விக்கெட் கீப்பராக இருக்கலாம்.

ஆனால், சரியான முறையில் Stumping செய்தால், சரியான Catch-ஐ பிடித்தால், அணிக்கு சரியான திருப்பத்தைக் கொடுத்தால், அணித் தலைவரை சரியான முறையில் வழி நடத்தினால், அவர்தான் சிறந்த கீப்பர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்