இலங்கை அணியின் தோல்விக்கு என்ன காரணம்: திசர பெரேரா

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்று பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக திசர பெரேரா 29 ரன்களும், தினேஷ் சந்திமல் 28 ரன்களும், உபுல் தரங்கா 25 ரன்களும் எடுத்தனர்.

வங்காளதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்களும், மஷ்ரபி மொர்டசா, ருபெல் ஹொசைன் தலா இரண்டு விக்கெட்களும், நசிர் ஹொசைன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

வங்காளதேச அணியின் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இலங்கையின் பொறுப்பு அணித்தலைவர் திசர பெரேரா, வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே தோல்விக்கு காரணம்

புதிய பயிற்சியாளராக ஹதுருசிங்கா கிடைத்திருப்பது எங்கள் அணிக்கு பிளஸ் பாயின்ட்.

ஏற்கனவே அவருடன் பணியாற்றி இருக்கிறேன், அவர் இப்போதுதான் அணிக்கு வந்திருக்கிறார், உடனடியாக யாராலும் எந்த அற்புதங்களையும் செய்துவிட முடியாது, அணியை நெறிபடுத்த அவருக்கு இன்னும் நேரம் வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்