மோசமான சாதனையை பதிவு செய்த புஜாரா

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன்அவுட் ஆன முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை புஜாரா பதிவு செய்துள்ளார்.

புஜாரா முதல் இன்னிங்சின் 10-வது ஓவரின் 4-வது பந்தில் களமிறங்கினார், முதல் பந்தை மிட்-ஆன் நோக்கி அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார்.

மிட்-ஆன் திசையில் பீல்டிங் செய்த நிகிடி ஸ்டம்பை குறிபார்த்து சரியாக எறிந்தார். இதனால் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

4 நாள் முடிவில் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா இந்தியாவின் வெற்றிக்கு 287 இலக்காக நிர்ணயித்தது.

இதை தொடர்ந்து இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் புஜாரா 11 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

27-வது ஓவரின் முதல் பந்தை பார்தீவ் பட்டேல் பவுண்டரி லைனை நோக்கி அடித்தார், பவுண்டரி லைன் அருகே சென்ற பந்தை நிகிடி தடுத்துவிட்டார்.

பின்னால் வந்த டி வில்லியர்ஸ் பந்தை விக்கெட் கீப்பரை நோக்கி வேகமாக வீசினார். அதேவேளையில் புஜாரா 3-வது ரன்னுக்கு ஓடும்போது விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ரன்அவுட் செய்தார். இதனால் புஜாரா 19 ரன்னில் மீண்டும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதன் மூலம் இந்திய டெஸ்ட் போட்டி வரலாற்றில் விளையாடிய இரு இன்னிங்சிலும் ரன் அவுட் ஆன முதல் வீரர் எனும் கசப்பான சாதனையை புஜாரா படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்