மச்சான் பார்த்து! மைதானத்தில் தமிழில் பேசிய முரளி விஜய்

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் தொடக்க வீரர் முரளி விஜய் மற்றொரு வீரரான ராகுலுடன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 287 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நான்காவது நாளில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சினால் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர்.

இதனால் தங்களது யுத்தி எதிரணிக்கு தெரியாமல் இருக்க, முரளி விஜய் களத்தில் இருந்த ராகுலிடம், ‘மெல்ல... மச்சான் இந்த ஓவர் எல்லாமே (பந்தை) உள்ளதான் போடுறாங்க’ என்று தமிழில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எனினும், முரளி விஜய் 9 ஒட்டங்களிலும், ராகுல் 4 ஒட்டங்களிலும் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்