புதிதாக துவங்குகிறோம்: புத்தாண்டில் சூளுரைத்த ஏஞ்சலா மேத்யூஸ்

Report Print Raju Raju in கிரிக்கெட்

2017-ன் அனுபவங்களை பின்னால் ஒதுக்கி வைத்து விட்டு 2018-ஐ புதிதாக துவங்க வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அணித்தலைவர் மேத்யூஸ் பேசியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு மோசமானதாக அமைந்தது. 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அந்த அணி வெறும் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில் இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தொடர் போட்டி 15-ஆம் திகதி தொடங்கியது.

இன்று நடக்கவுள்ள போட்டியில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இலங்கை அணித் தலைவர் மேத்யூஸ் அளித்துள்ள பேட்டியில், புத்தாண்டில் 2017-ன் அனுபவங்களை ஒதுக்கிவிட்டு எல்லவாற்றையும் புதிதாக தொடங்க விரும்புகிறோம்.

அணி வெற்றி பெறுவது முக்கியம் என்றாலும் 2019 உலக கிண்ணத்துக்கு சரியான அணியை கட்டமைப்பது அதை விட முக்கியமாகும்.

கடந்த சில தோல்விகள் எங்களை சோர்வடைய செய்யவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் தான் பலம் வாய்ந்த இந்திய அணியை வென்றிருக்கிறோம்.

எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர், களத்தில் மகிழ்ச்சியாக ஆட வேண்டியது தான் பாக்கி என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்