டெஸ்டில் மீண்டும் தவறு செய்த கோஹ்லி: இதை செய்ய தில் இருக்கா என சேவாக் நெத்தியடி

Report Print Santhan in கிரிக்கெட்
774Shares
774Shares
ibctamil.com

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புவனேஷ்வர் குமாரை நீக்கியது சரியான முடிவல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியில் துவக்க வீரர் தவான், சகா, புவனேஷ்வர் நீக்கப்பட்டு ராகுல், பார்த்தீவ் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய புவனேஷ்வர் குமாரை நீக்கியதால், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், தவான் ஒரு டெஸ்டில் சொதப்பிய காரணத்துக்காகவும், புவனேஷ்வர் குமாரை ஒரு காரணமும் இல்லாமலும் அணியில் இருந்து நீக்கிய தலைவர் கோஹ்லி, இரண்டாவது டெஸ்டில் சாதிக்கவில்லை என்றால், தானே முன் வந்து விலகிக்கொள்ள தில் இருக்கிறதா, இஷாந்த் சர்மாவின் உயரம் கைகொடுக்கும் என்றாலும், கோஹ்லி இந்த இடத்தில் புவனேஷ்வர் குமாரின் தன்நம்பிக்கையை உடைக்கிறார்.

புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக வேறு பந்து வீச்சாளரை நீக்கியிருக்கலாம். இது சரியான முடிவல்ல என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் முதல் டெஸ்டில் ரகானேவை களமிறக்காமல் கோஹ்லி, ரோகித் சர்மாவை களமிறக்கியது தவறு என்று கூறப்பட்ட நிலையில், சிறப்பாக விளையாடி வரும் புவனேஷ்வர் குமாரை கோஹ்லி நீக்கி மீண்டும் தவறு செய்துள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்