டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்
303Shares
303Shares
ibctamil.com

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் பகீர் ஷா, டான் பிராட்மேனின் துடுப்பாட்ட சராசரி சாதனையை முறியடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் பகீர் ஷா. முதல்தர கிரிக்கெட் போட்களில் விளையாடி வரும் இவர், 12 இன்னிங்ஸில் 1096 ஒட்டங்கள் குவித்துள்ளார்.

இதன்மூலம், அவரது சராசரி 121.77 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேனின் துடுப்பாட்ட சராசரியான 99.94-ஐ, பகீர் ஷா முறியடித்துள்ளார்.

மேலும், தனது அறிமுக போட்டியிலேயே 256 ஒட்டங்கள் குவித்து அசத்திய பகீர் ஷா, முதல் போட்டியிலேயே அதிகபட்ச ஒட்டங்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

சமீப காலமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர். மேலும், அந்த அணியின் பந்துவீச்சாளர் ரஷித் கான், டி20 தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்