தென்னாப்பிரிக்காவிற்கு பதிலடி உண்டு: பாண்டியாவின் நம்பிக்கை

Report Print Harishan in கிரிக்கெட்
553Shares
553Shares
ibctamil.com

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ஹர்திக் பாண்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றிவாகை சூடியது.

72 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணிக்கு, இந்திய ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் இந்திய அணிக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ள இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ”வாழ்த்துக்களும் ஆதரவும் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி. இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அடுத்த டெஸ்ட்டில் நிச்சயம் பதிலடி கொடுப்போம்” என பதிவிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா இவ்வாறு பதிவிட்டுள்ளது இந்திய அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஊக்கத்தை வழங்குவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவரின் அந்த பதிவு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்