2018 ஐபிஎல் தொடரில் இந்த வீரர்களை எடுப்பதில் சண்டை வரும்: யார் யார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் திகதி துவங்கி மே மாதம் 31-ஆம் திகதி முடிவடைகிறது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம், அந்த வகையில் சென்னை, மும்பை அணிகள் டோனி, ரோகித் போன்றோரை தக்க வைத்துக் கொண்டன.

இதையடுத்து ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் வரும் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் சில வீரர்களை எடுப்பதற்கு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சண்டை போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது, அந்த வகையில் சில வீரர்களை பற்றி இங்கு பார்ப்போம்.

ரசித் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரசித் கான் கடந்த ஆண்டு, நடந்த ஐபிஎல் தொடரில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஆண்டே 4 கோடிக்கு வாங்கியது.

இவரை எடுப்பதற்கும் அணிகள் போட்டி போட்டன. ஹைதரபாத் அணிக்காக 14 போட்டிகள் விளையாடியுள்ள ரசித் கான் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

தற்போது டி20 தொடரில் அசத்தி வரும் இவரை எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் போட்டி போடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கிறிஸ் லயன்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் ஹாட்டஸ்ட் வீரர் என்றால் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் லயனைக் கூறலாம். கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர் கடந்த 12 போட்டிகளில் 384 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி முதல் பந்திலே சிக்ஸர் அடிக்கும் திறனுடைய இவர், பீல்டிங்கிலும் அசத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் 41 பந்துகளுக்கு 93 விளாசிய இவரையும் எடுக்க அணிகள் போட்டி போடும்.

பென் ஸ்டோக்ஸ்

கடந்த ஆண்டு அதிக விலைக்கு வாங்கப்பட்ட நபர் தான் பென் ஸ்டோக்ஸ் இவரை புனே அணி 14.5 கோடி கொடுத்து வாங்கியது, அதற்கு ஏற்ற வகையில் புனே அணியின் வெற்றிக்கு பெரிதாக பாடுபட்டார் ஸ்டோக்ஸ்.


ஆனால் இவர் கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்த ஆண்டு இவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பிருக்கிறது. ஆல் ரவுண்டரான இவர் கடந்த ஆண்டு 12 போட்டிகளில் 316 ஓட்டங்கள் குவித்து 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்சுக்கு இந்த வருடம் எத்தனை கோடியோ..

கிரன் பொல்லார்டு

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் கிரன் பொல்லார்டு.

மேற்கிந்திய தீவு வீரரான இவர் பேட்டிங், பந்து வீச்சு, பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் கலக்கும் திறன் உடையவர். ஆனால் மும்பை அணி இவரை தக்க வைத்துக் கொள்ளாமல் கழட்டி விட்டுள்ளது.

இதுவரை 123 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,343 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மும்பை அணிக்கு பல வெற்றிகள் தேடித் தந்தவரை, மும்பை அணியே இந்த வருடமும் எடுக்கலாம்.

குயிண்டன் டி காக்

தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரரும் விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் கடந்த 13 போட்டிகளில் 445 ஓட்டங்கல் குவித்துள்ளார். அதில் ஒரு சதமும் அடங்கும்.

இப்படி கீப்பிங், பேட்டிங் என அசத்தி வரும் குயிண்டன் டி காக்கை எடுப்பதற்கு கண்டிப்பாக போட்டி இருக்கும் என்றே கூறலாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்