ரஹானேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தென் ஆப்பிரிக்க வீரர்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவை நீக்கியது தவறு என தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் தலைவர் கெப்னர் வெஸ்சல்ஸ் தெரிவித்து ரஹானேக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ரஹானே சிறப்பானதோர் வீரர் அவரை டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கியமை அதிர்ச்சியைத் தருகின்றது எனவும் கெப்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த போட்டிகளில் அவர் சிறப்பாக செயற்படாத காரணத்தினால் அவரை போட்டியில் இருந்து நீக்கியது தவறு எனவும், அடுத்த போட்டிகளில் அவர் இடம்பிடிப்பார் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டாலும் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கெப்னர், தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்தியா சிறப்பாக முறையில் ஆயத்தமாகவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்