டோனியுடன் கைகோர்க்கும் மைக்கேல் ஹசி

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமாக திகழ்ந்த மைக்கேல் ஹஸி மீண்டும் இந்தாண்டு சென்னை அணியுடன் இணையவுள்ளார்.

சூதாட்ட தடை காரணமாக 2 ஆண்டுகள் IPL போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த சென்னை அணி, மீண்டும் தடையிலிருந்து மீண்டுவந்து இம்முறை போட்டிகளில் களமிறங்கவுள்ளது.

இந்தநிலையில் சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவே ஹஸி இணையவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

சென்னை அணியில் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரும் விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், மற்றைய வீரர்கள் ஏலத்தின் மூலம் தேர்வாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்