வங்கதேச தொடருக்கு தயார்: இலங்கை அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் மேத்யூஸ் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித தொடர்களில் விளையாடியது, அப்போது டி20 தொடரின் போது, இலங்கை அணி வீரரான மேத்யூசுக்கு காயம் ஏற்பட்டது.

ஆனால் காயம் பெரிய அளவில் இல்லை என்றும் சில நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் காயம் காரணமாக வங்கதேச தொடரில் மேத்யூஸ் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், வங்கதேச தொடரில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இலங்கை அணியில் துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பி வர, மேத்யூஸ் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார், இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்