உலகை ஈர்த்துள்ள விசித்திர கிரிக்கட் போட்டியில் மஹேல மற்றும் மாலிங்க ஒரே அணியில்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

ஒரு வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ளது.

சுவிஸர்லாந்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி பனியுடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

தற்போது சர்வதேச கிரிக்கட் போட்டியில் விளையாடும் வீரர்களும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட வீரர்கள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி லசித் மாலிங்க மற்றும் இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் மஹேல ஜயவர்தனவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த போட்டிகளில் சைய்ட் அப்ரிடி, ஜெக்காலிஸ், விரேந்திர செவாக், டேனியல் விட்டோரி, மொஹமட் கைப், நெதன் மெக்கலம் ஆகிய பிரபல வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

ரோயல்ஸ் மற்றும் பத்ராஸ் பேலஸ் டயமன்ட் ஆகிய இரண்டு அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன.

இந்த போட்டியில் ரோயல் அணி சார்பில் சைட் அப்ரிடி, டேனியல் விட்டோரி, கிரன்ட் எலியட், நெதன் மெக்கலம், மொன்டி பெனசர், ஒவிஸ்ஸா, ஜெக்காலிஸ், கிரகம் ஸ்மி,த் சொய்ப் அக்தார், அப்துல் ரசாக் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

பத்ராஸ் பேலஸ் டயமன்ட் சார்பில் விரேந்திர செவாக், மைக்கல் ஹசி, லசித் மாலிங்க, மஹேல ஜயவர்தன, மெஹமட் கைப், டுவாய்ன் பிரோவோ ஆகியோர் விளையாடவுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்