இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இன்றைய நாளில் புதிய புரளி ஒன்றை கிளறி விட்டுள்ளார்.
இலங்கையின் புதிய பயிற்சியாளராக கடமையை பொறுப்பேற்றுள்ள சந்திக்க ஹத்துருசிங்க வழிகாட்டலில், பங்களாதேஷ் சுற்றுலாவுக்கான உத்தேச 23 பேர் கொண்ட அணியில் மலிங்க சேர்க்கப்படவில்லை.
34 வயதான மலிங்க அணியிலிருந்து இடை நிறுத்தப்படவில்லை என்றும், அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருது தெரிவித்துள்ள மலிங்க, எனக்கு ஏன் ஓய்வு வழங்கினார்கள் என்று இதுவரை அறிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
உபாதையிலிருந்து மீண்டு வந்து 13 போட்டிகளில் 10 விக்கெட்களை கைப்பற்றினேன்,ஆனால் எனது பந்துவீச்சில் 13 போட்டிகளில் 12 பிடிகள் நழுவவிடப்பட்டதை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.
இலங்கை அணிக்காக 2019 உலக கிண்ண போட்டிகளில் விளையாடும் ஆவலில் நான் இருக்கிறேன், அப்படி அமையுமாயின் அதுவே எனது இறுதி தொடர் எனவும் மலிங்க தெரிவித்துள்ளார்.