முதல் டெஸ்டில் ஷிகர் தவான் அவுட்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
249Shares

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இதற்காக இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்கா சென்றது, மும்பையில் இருந்து கிளம்பிய போது ஷிகர் தவானின் இடது கால் சற்று வீக்கத்துடன் இருந்ததால் தடுமாறி நடந்து சென்றார்.

எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டுள்ளதால் முதல் டெஸ்டில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒருவேளை ஷிகர் தவான் பங்கேற்காமல் போனால், முரளி விஜய்யுடன் சேர்ந்து ராகுல் தொடக்க வீரராக களமிறங்கலாம்.

ஷிகர் தவான் காயம் குறித்து கண்காணித்து வருவதாகவும், பிஸியோதெரபிஸ்ட் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்