இளம்வீரரின் காயத்தை மறைக்கும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்

Report Print Kabilan in கிரிக்கெட்
488Shares

இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸின் காலில் ஏற்பட்டுள்ள காயத்தை, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறைக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமிந்து மெண்டிஸ், 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணிக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் நடந்த 10 நாட்கள் பயிற்சியில் அவர், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி, நியூசிலாந்தில் U-19 உலக கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் கமிந்து மெண்டிஸ் பங்கேற்கவில்லை.

கடந்த ஒரு மாதமாக இலங்கை U-19 அணியின் துடுப்பாட்டம் மற்றும் காயங்கள் குறித்த சர்ச்சைகள் நிலவி வருகிறது.

இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இளம் வீரர் கமிந்து மெண்டிஸின் காயத்தை மறைத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண தொடரில், அவரை விளையாட வைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், U-19 அணியின் பயிற்சியாளர் ராய் டையாஸ் கூறுகையில், ‘உலக கிண்ணத் தொடருக்கு முன்பாக, கமிந்து மெண்டிஸ் குணமடைந்து அணியை வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்