மலிங்காவின் விடாமுயற்சியை பாராட்டிய பயிற்சியாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, அணியில் மீண்டும் இடம்பிடிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் மீதான மலிங்காவின் அர்பணிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசின்ஹா தெரிவித்துள்ளார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார், அதன் பிறகு அவருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அவர் தற்போது விளையாடி வருகிறார். அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மலிங்கா, அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து ஹதுருசின்ஹா கூறுகையில், NCCயில் விளையாடும் மலிங்கா, இன்று போட்டி இல்லை என்று தெரிந்தும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அவரின் உற்சாகமான இந்த பயிற்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

மேலும், அவர் மற்ற வீரர்களுக்கு ஒரு உந்துகோலாகவும், நல்லதொரு செய்தியையும் இந்த பயிற்சியின் வாயிலாக கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்