ஓர் இரட்டை சதம் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்த இங்கிலாந்து வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஆஷஸ் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 244 ஓட்டங்கள் எடுத்துள்ளார், இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 491 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெஸ்டர் குக், 244 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுபெற்றபோது, தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் ஆட்டமிழக்காமல் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

இதற்கு முன்பு நியூசிலாந்தின் கிளென் டர்னர் இந்த சாதனையை(223 ஓட்டங்கள்) படைத்திருந்தார்.

மேலும் அலெஸ்டர் குக் டெஸ்ட் அரங்கில் 11,956 ஓட்டங்கள் எடுத்ததன் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாராவை(11,953) பின்னுக்குத் தள்ளி, டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த 6வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதுதவிர மெல்போர்ன் மைதானத்தில் அந்நிய நாட்டு வீரர் அடித்த அதிகபட்ச ஓட்டங்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனைகளையும் குக் படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்