ஜெயவர்தனே சாதனை முறியடிப்பு: அவரின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த பட்டியலில் ஜெயவர்தனே பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து அவர் பதிலளித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே மொத்தம் 11814 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் இதுநாள் வரை அவர் 8-வது இடத்தில் இருந்தார்.

ஆனால் ஆஷிஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் குக் தற்போது டெஸ்ட் போட்டிகளில் 11956 ஓட்டங்கள் குவித்து இந்த பட்டியலில் சரசரவென 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் ஜெயவர்தனே 8-வது இடத்திலிருந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், நீங்கள் டெஸ்ட் ஓட்டங்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டீர்களே என ரசிகர் ஜெயவர்தனேவிடம் டுவிட்டரில் கேள்வியெழுப்பினார்.

அதற்கு, சாதனைகள் என்றால் அது முறியடிக்கபட வேண்டியது தான் எனவும், குக் சிறப்பாக விளையாடினார் எனவும் ஜெயவர்தனே ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்