முரளிதரனுக்கு நடந்ததை நினைத்து கவலை: 22 ஆண்டுகளுக்கு பிறகு பேசிய அவுஸ்திரேலிய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு நடந்ததை நினைத்துப் பார்த்தால் கவலை தான் வருகிறது என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் ஜாம்பவான்களில் ஒருவரும், உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுபவர் முத்தையா முரளிதரன்.

டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்திருந்தாலும், இதை இவர் அடைவதற்கு பட்ட துயரங்கள் கூறினால் மிகையாது, அதுமட்டுமின்றி அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச்சினைகளை அடுத்தடுத்து வந்தன.

அதிலும் குறிப்பாக 1990-ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். இதானால் அந்நாட்டு நடுவர்கள் சிலர் முரளிதரன் பந்தை எறிவதாக கூறி குற்றம் சாட்டினர்.

அதற்கு ஏற்ற வகையில் ஊடகங்களும் அவருக்கு எதிராக செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில் இது நடந்து சுமார் 22-ஆண்டுகள் ஆன நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாக்சிங் டே என்று அழைக்கப்படுகின்ற கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் நடைபெற்ற போட்டி குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அதில், முரளிதரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே அவர் பந்தை வீசி எறிவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர்களான டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகியோர் குற்றம் சுமத்தியதாக கூறியுள்ளார்.

முரளிதரனின் பந்துவீச்சில் தவறுகள் இருப்பது தெரிந்திருந்தால், அவர்கள் போட்டிக்கு முன்னரே தெரிவித்து பிரச்சனையை தீர்த்திருக்க வேண்டும், அதை விட்டு விட்டு அவர் மீது குற்றம் சுமத்தியது அவரை அகௌரவப்படுத்தியதாகவே நான் கருதுகிறேன்.

அதுமட்டுமின்றி குறிப்பாக ஊடகங்கள் வாயிலாக இதற்காக பொய்யான பிரச்சாரங்களும் பரவின, ஆனால் இந்த சம்பவத்தை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், என்னைப் பொறுத்தமட்டில் முரளிதரனின் பந்துவீச்சு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்திருந்தது.

அன்றை போட்டியின் போது மறுபுறத்தில் இருந்த ரொஸ் எமர்சன் முரளியின் பந்துவீச்சானது நோ போல் என்று அறிவித்தார்.

ஆனால் உண்மையில் அது விதிமுறைகளுக்கு உட்பட்ட பந்தாகவே அமைந்திருந்தது. எனவே அவரும் முன் ஆயத்தமாகவே மைதானத்தில் முரளியின் பந்தை நோ போல் என அறிவித்திருக்கலாம் என்பதை நான் புரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்