விராட் கோஹ்லி மிகச்சிறந்த மனிதநேயம் மிக்கவர்: இலங்கை ரசிகர் புகழாரம்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
206Shares

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் திருமண விருந்துபசாரத்தில் கலந்து சிறப்பித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர விசிறியான கயான் சேனநாயக்க தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, பிரபல பொலிவூட் நட்சத்திரம் அனுஸ்கா சர்மா ஆகியோரின் திருமண விருந்துபசாரம் மும்பையில் அண்மையில் இடம்பெற்றது.

குறித்த விருந்துபசாரத்தில் இலங்கை அணியின் தீவிர விசிறியான கயான் சேனநாயக்க ழைக்கப்பட்டிருந்தமை எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

தொழிலதிபர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என்று மிக முக்கியமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வில், சாமான்ய ரசிகர் ஒருவர் எப்படி பங்கேற்றார் என்பதே எல்லோரது கேள்வியாகும்.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர விசிறியான கயான் சேனநாயக்க தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸாப்(Whatsup ) சமூக வலைத்தளத்தினுடாக விராட் கோஹ்லி என்னை தனது விருந்துபசார நிகழ்வுக்கு அழைத்திருந்தார்,உலகளவில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒரே ரசிகன் நான் மட்டுமே.

கோஹ்லி ஒரு திறமையான வீரர் மட்டுமல்ல ,அவர் ஒரு மிகசிறந்த மனிதநேய பண்புகளை கொண்டவர் எனவும் கயான் சேனநாயக்க புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்