இலங்கை அணிக்கு பயிற்சியை தொடங்கினார் சண்டிகா ஹதுரசிங்க

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சண்டிகா ஹதுரசிங்க பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கையின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் சண்டிகா ஹதுரசிங்க நியமிக்கப்பட்டார்.

49 வயதான இவர், இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை அணியின் சில வீரர்களுக்கு பயிற்சி கொடுத்த சண்டிகா, நேற்று அதிகாரபூர்வமாக தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

அடுத்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடருக்காக, 23 முதல்நிலை வீரர்கள் இலங்கை அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முத்தரப்பு தொடரை அடுத்து வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

இதற்கான அணி வீரர்கள் பட்டியலில், மதுஷன்கா எனும் இளம் வீரரை சண்டிகா ஹதுரசிங்க பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்