விட்டா இவங்க 400 ஓட்டங்களே அடிப்பாங்க: கபில்தேவ்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

தற்போதிருக்கும் பேட்ஸ்மேன்கள் ஒருநாள் போட்டிகளில் 400 ஓட்டங்கள் அடிப்பார்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு உலகக்கோப்பையை வென்று தந்த முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ்.

உதய்ப்பூரில் நடைபெற்ற கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, தற்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் மனநிலை முற்றிலும் மாறியுள்ளது. அந்தக் காலத்தில் 35 பந்துகளில் சதம் அடிப்பது என்பது யாரும் எண்ணிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஒருநாள் போட்டியில் வீரர்கள் 300 ஓட்டங்கள் அடிப்பார்களா என்று கேள்வி கேட்டபோது, 300 ஓட்டங்கள் என்ன? ஒருநாள் வீரர்கள் 400 ஓட்டங்களே அடிப்பார்கள்.

ஏனெனில் வீரர்கள் தங்கள் ஆட்டத்திறனை மாற்றிக்கொண்டுள்ளனர், முன்பெல்லாம் ஒரு டெஸ்ட் போட்டியின் போது ஒருநாள் ஆட்டத்தில் ஒரு அணி 280 ஓட்டங்கள் குவிக்கும். ஆனால், இப்போது வீரர்கள் அதை 20 ஓவர்களிலேயே அடிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்