சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே சாதனையை நெருங்கும் பிரபல வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்து வீரர் அலஸ்டர் குக் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 32வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில் முக்கிய ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இங்கிலாந்தின் குக் (33) சதமடித்துள்ளார், இது அவரின் 32-வது டெஸ்ட் சதமாகும்.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இலங்கை அணி முன்னாள் வீரர் ஜெயவர்தனே, வெஸ்ட் இண்டீஸ் வீரர் லாரா, இந்தியாவின் கவாஸ்கர் ஆகியார் 34 சதங்கள் அடித்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் ஓய்வு பெற்றுவிட்டதால் இன்னும் மூன்று சதங்கள் அடித்தால் குக் அவர்களை முந்திவிட முடியும்.

அதே போல இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா 38 சதங்கள் அடித்துள்ள நிலையில் திறமையை தொடர்ந்து குக் வெளிப்படுத்தினால் அந்த சாதனையை கூட முறியடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்