இரண்டே நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்கா அபாரம்

Report Print Kabilan in கிரிக்கெட்

நான்கு நாட்களாக குறைக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி, ஜிம்பாப்வே அணியின் படுதோல்வியால் இரண்டே நாட்களில் முடிந்துள்ளது.

5 நாட்களை கொண்ட டெஸ்ட் போட்டி, ஆட்டத்தின் விறுவிறுப்பை கூட்டவும், முடிவினை விரைவாக அறிந்துகொள்ளவும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக குறைக்கப்பட்டது.

இந்த முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் கடந்த 26ஆம் திகதி மோதின.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 125 ஓட்டங்களும், டிவில்லியர்ஸ் 53 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 30.1 ஓவர்களில் வெறும் 68 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் 241 ஓட்டங்கள் பின் தங்கி ‘பாலோ ஆன்’ ஆன ஜிம்பாப்வே, தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் 121 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக எர்வின் 23 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மஹாராஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...