அஷ்வின்-ஜடேஜா இனி அவ்வளவு தானா? தேர்வு குழு தலைவர் பிரசாத் பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் எதிர்காலம் குறித்து தேர்வு குழு தலைவர் பிரசாத் பதில் அளித்துள்ளார்.

இந்திய அணி அடுத்தாண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணியில் வழக்கம் போல் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பெயர்கள் இல்லை, இதனால் அவர்களின் எதிர்காலம் அவ்வளவு தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ தேர்வுக்குழு தலைவர் பிரசாத், இருவரும் இந்திய அணிக்காக நிறைய செய்துள்ளனர். அவர்களுக்காக தேர்வு கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.

அவர்கள் நிச்சயமாக மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க மட்டுமே அவர்கள் நீக்கப்பட்டனர். வேறு எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்