வைரலாகும் அவுஸ்திரேலிய வீரரின் அசத்தலான கேட்ச்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இங்கிலாந்து வீரர் அடித்த பந்தை அசத்தலாக கேட்ச் பிடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மெல்போர்னில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டோன்மேனிற்கு, அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீசினார்.

ஸ்டோன்மேன், தான் எதிர்கொண்ட பந்தை உயரே எழும்படி அடித்தார். அப்போது எதிர்முனையில் இருந்த லயன், அசத்தலாக அந்த பந்தை தனது வலக்கையால் கேட்ச் பிடித்தார்.

லயனின் இந்த கேட்ச் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

நாதன் லயன் இதற்கு முன்பும், இதே தொடரில் மொயின் அலியின் கேட்சை இடக்கையால் கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், லயனின் சகோதரர் பிரண்டென் கூறுகையில், ‘ஒவ்வொரு மதியவேளையிலும் எங்களின் தாத்தாக்களும், பாட்டிகளும் தோட்டத்தில் டென்னிஸ் விளையாடுவார்கள்.

அப்போது நானும் லயனும் அந்த பந்துகளை கேட்ச் பிடிப்போம். அந்த பயிற்சியே நாதன் லயன் இவ்வாறு அற்புதமாக கேட்ச் பிடிக்க உந்துதலாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்