2017ல் அதிக ஓட்டங்கள் குவித்த டாப் 5 வீரர்கள் யார்? பட்டியலில் இலங்கை வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

2017-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

விராட் கோஹ்லி (இந்தியா)

இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி 2017-ல் இதுவரை மொத்தம் 1460 ஓட்டங்கள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இவரின் சராசரி 76.84 ஆகும்.

ரோகித் சர்மா (இந்தியா)

ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரரான ரோகித் சர்மா இந்தாண்டு 71.83 சராசரியில் மொத்தம் 1293 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

உபுல் தரங்கா (இலங்கை)

இலங்கை அணிக்கு இந்தாண்டு மோசமாக அமைந்தாலும், அந்த அணியின் தலைவர் உபுல் தரங்கா துடுப்பாட்டத்தில் ஆண்டு முழுவதும் கலக்கினார்.

இந்தாண்டு 1011 ஓட்டங்கள் குவித்துள்ள அவரின் சராசரி 48.14 ஆகும்.

ஜோ ரூட் (இங்கிலாந்து)

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 2017-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 983 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரின் சராசரி 70.21 ஆகும்.

ராஸ் டெயிலர் (நியூசிலாந்து)

இந்தாண்டு ஆரம்பத்திலேயே சதத்துடன் தொடங்கிய டெயிலர் 60.50 என்ற நல்ல சராசரியுடன் மொத்தம் 968 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்