டி20 தரவரிசை பட்டியல்: இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐசிசி டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் விராட் கோஹ்லி முதலிடத்தை இழந்துள்ள நிலையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.

டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தலைவர் கோஹ்லி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

திருமணம் காரணமாக இலங்கைக்கு எதிரான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடாததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கோஹ்லியின் சரிவால் 2-வது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் முதலிடத்திற்கு வந்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசின் எவின் லீவிஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணியை பொருத்தவரை குசல் பெரேரா எட்டு இடங்கள் முன்னேறி 30வது இடத்துக்கும், உபுல் தரங்கா 36 இடங்கள் முன்னேறி 105-வது இடத்துக்கும் வந்துள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் திசேரா பெரேரா 70-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்