தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனை நெருங்கும் அவுஸ்திரேய வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவன் ஸ்மித், தரவரிசைப் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

ஸ்டீவன் ஸ்மித் ஆஷஸ் தொடரில் 141 மற்றும் 239 ஒட்டங்களை விளாசியதால், அவரின் டெஸ்ட் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக உயர்ந்துள்ளது.

இதுவே அவரின் அதிகபட்ச தரவரிசைப் புள்ளிகள் ஆகும். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லென் ஹட்டனுடன் இரண்டாவது இடத்தை, ஸ்மித் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதல் இடத்தில் 961 புள்ளிகள் பெற்று, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டான் பிராட்மேன் உள்ளார். இதுவரை எவரும் டான் பிராட்மேனை விட அதிக புள்ளிகளை பெற்றதில்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் இருந்து டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்