புதுமாப்பிள்ளை கோஹ்லி, ரோகித் சர்மாவிடம் கேட்ட டிப்ஸ் என்ன தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
527Shares

இந்திய அணியின் தலைவரான விராட்கோஹ்லி, ரோகித் சர்மாவிடம் இரட்டை சதம் அடிப்பது எப்படி என்பது குறித்த டிப்ஸ் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைவரான விராட்கோஹ்லி, புதுமாப்பிள்ளை என்பதால், தற்போது மிகவும் பிஸியாக உள்ளார். இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 21-ஆம் திகதி மற்றும் 26-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தனது காதலியை கரம் பிடித்த கோஹ்லிக்கு, ரோகித் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கடந்த 12-ஆம் திகதி கோஹ்லிக்கு, வாழ்த்துக்கள், கோஹ்லி உங்களுக்கு கணவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பகிர்ந்துகொள்கிறேன். அனுஷ்கா சார்மா உங்களின் குடும்ப பெயரை அப்படியே வைத்திருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அனுஷ்கா சர்மா, நன்றி ரோகித், அதோடு உங்களின் அபார இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிஸியாக இருந்த புதுமாப்பிள்ளை கோஹ்லி, ரோகித்சர்மாவின் அந்த டுவிட்டிற்கு தற்போது பதிலளித்துள்ளார். அதில், நன்றி ரோகித், ஒரு கணவருக்கான டிப்ஸ்கள் உள்ள ஹாண்ட் புக்குகள் மட்டுமில்லாமல், அதோடு இரட்டை சதம் அடிப்பதற்கான குறிப்புகளை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்