34 ஆண்டு கால சாதனையை சமன் செய்த ஹர்த்திக் பாண்டியா

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிகளில் ஓர் ஆண்டில் அதிக விக்கெட் மற்றும் 500 ஒட்டங்கள் எடுத்து முன்னாள் வீரர் கபில் தேவ்வின் 34 ஆண்டு சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்திய அணியின் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா, இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம், ஓர் ஆண்டில் 30 விக்கெட்டுகளுடன் 500க்கும் மேல் ஒட்டங்கள் சேர்த்த இரண்டாவது இந்திய ஆல்ரவுண்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 1983ஆம் ஆண்டு, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் கபில் தேவ் 27 போட்டிகளில் 32 விக்கெட்டுகளுடன் 517 ஒட்டங்கள் எடுத்திருந்தார்.

ஹர்த்திக் பாண்டியா 31 விக்கெட்டுகளுடன் 557 ஒட்டங்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், கபில் தேவ்வின் 34 ஆண்டு சாதனையை ஹர்த்திக் சமன் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்