இங்கிலாந்து அணியின் தலைவரான ஜோ ரூட்டை, முன்னாள் வீரர் பீட்டர்சன் கிண்டலடித்தற்கு ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி இழந்துள்ளதால் வீரர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கேவின் பீட்டர்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தற்போது இங்கிலாந்து அணிக்கு தலைவராக இருக்கும், ஜோ ரூட்டை கிண்டலடிப்பது போன்று அவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அருமையான தலைவர் என்று குறிப்பிட்டு அதில் ஆஷஸ் ஹெஷ்டாக்கை பயன்படுத்தியிருந்தார்.
Captain Fantastic! #Ashes pic.twitter.com/rV3n55P7Y5
— KP (@KP24) December 18, 2017
இதைக் கண்ட ரசிகர்கள் சிலர், ஆத்திரத்தில், ரூட் ஒரு அற்புதமான தலைவர், உங்களிடம் இருந்து இது போன்ற பதிவை எதிர்ப்பார்க்கவில்லை, முதலில் நீங்கள் ஒரு தலைசிறந்த தலைவரா? கூடிய விரைவில் தான் ஒரு சிறந்த தலைவன் என்று மீண்டும் ரூட் நிரூபிப்பார் என்று ரசிகர்கள் பீட்டர்சனின் டுவிட்டிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.