அஸ்வின் மற்றும் ஜடேஜாவுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்: சாஹல்

Report Print Kabilan in கிரிக்கெட்
354Shares

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்நிலையில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுடன் எங்களை ஒப்பிடாதீர்கள் என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி, 20 ஒவர்கள் வீசி 88 ஒட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருவதால், அனுபவ வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யுவேந்திர சாஹல் கூறுகையில், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்காக கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர். ஆனால் நானும், குல்தீப் யாதவும் 4 முதல் 5 தொடர்கள் வரை தான் விளையாடியுள்ளோம்.

அதனால் அவர்களுடன் எங்களை ஒப்பிடுவதில் நியாயம் இல்லை, எங்களது நோக்கமே, களமிறங்கும் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான். எனவே, நீங்கள் ஒப்பிட்டு பார்ப்பது சரியாக இருக்காது.

நாங்கள் இருவரும் இந்திய மண்ணில் தான் அதிக ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். இலங்கைத் தொடரில் பங்கேற்றபோது கூட, இங்குள்ள சூழ்நிலைதான் அங்கும் இருந்ததால் எங்களுக்கு அது சாதகமாக இருந்தது.

அயல் நாட்டு தொடர்களில் நாங்கள் இன்னும் விளையாடவில்லை. இலங்கைத் தொடர் முடிந்தவுடன், எங்களுக்கு ஒரு மாத இடைவெளி உள்ளது. இந்த காலகட்டத்தில், தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களுக்கு ஏற்ப எங்களை தயார் செய்து கொள்வது மிகவும் அவசியம்.

இந்திய ஏ அணிக்காக தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் ஆடியுள்ளேன். ஆனால், பெரிய ஆடுகளங்களில் பங்கேற்றதில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்