இது வரை வெளிவராத புகைப்படம்: கோஹ்லி-அனுஷ்காவுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன தவான்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லிக்கு, அணியின் துவக்க வீரர் தவான் இதுவரை வெளியிடாத புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, திருமண வாழ்த்து கூறியுள்ளார்.

நீண்ட நாட்கள் காதலர்களான இந்திய அணி வீரர் விராட் கோஹியும், அனுஷ்கா சர்மாவுக் இத்தாலியி உள்ள டஸ்கனி பகுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்வில், இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரரான தவான், வழக்கம் போல தனது ஸ்டைலில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அதாவது இதுவரை வெளிடப்படாத புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, தோ மஸ்தானே சலே ஜிந்தகி பனானே, இருவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் அமைய இருவருக்கும் வாழ்த்துகள் என்றும் இரு நெருக்கமான காதலர்கள் தங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்