IPL போட்டிகளில் பஞ்சாப் அணி செய்த அதிரடி மாற்றம்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

IPL போட்டிகளில் குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் பிராட் ஹோட்ஜ் , அடுத்தாண்டு முதல் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

குஜாரத் லயன்ஸ் அணி அடுத்தாண்டுக்கான IPL போட்டிகளில் பங்கேற்காது எனும் காரணத்தால், பஞ்சாப் அணி தங்களது தலைமை பயிற்சியாளராக ஹோட்ஜை தேர்வு செய்துள்ளது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு IPL தடை விதிக்கப்பட்ட காரணத்தால் கடந்த 2 பருவகாலமாக குஜராத் லயன்ஸ் அணிக்கு IPL போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.

ஆயினும், சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீதான தடை நீங்கி அவ்வணிகள் மீண்டும் களத்துக்கு திரும்பும் நிலையில் குஜராத், புனே அணிகளுக்கு IPL வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்