மைதானத்தில் கண்ணீர் விட்ட ரோஹித் ஷர்மா மனைவி: வைரலாகும் வீடியோ

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
559Shares
559Shares
ibctamil.com

இலங்கை அணிக்கெதிராக தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடியது இந்தியா.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்றுள்ள மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று இந்தியா அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பத்தில் நிதானமாக ஆரம்பித்து பின்னர் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர்.

இதனால், அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

தவான் 67 பந்துகளுக்கு 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ், 70 பந்துகளுக்கு 88 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால், கடைசி பந்து வரை களத்தில் இருந்த ரோஹித், ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கட்டுகளை இழந்து 392 ஓட்டங்களை குவித்தது.

இறுதி ஓவரின்போது 191 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார் ரோஹித்.

பெரேரா இறுதி ஓவரின் முதல் பந்தில் ஆறு ஓட்டத்தை விளாச, இன்னும் மூன்று ஓட்டங்களே எடுக்க வேண்டும் என்ற நிலையில், இரண்டாவது பந்தில் இரண்டு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித்தின் மனைவி கண்ணில் கண்ணீர் கசிந்தது.

அடுத்த பந்தில் பந்தைத் தட்டி, சுலபமாக இரண்டு ஓட்டங்கள் எடுத்தார் ரோஹித்.

ஒரு வழியாக 151 பந்துகளுக்கு 200 ஓட்டங்களை கடந்த பின்னர், ரோஹித்தின் மனைவி ஆனந்த கண்ணீரில் துள்ளிக் குதித்து உற்சாகப்படுத்த, அரங்கமே இந்திய அணித்தலைவருக்கு எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது.

இந்த நிலையில் , 200 ஓட்டங்களை பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா தனது மகிழ்ச்சியை வௌிப்படுத்தும் வகையில் மனைவியை நோக்கி முத்தமொன்றை பறக்கவிட்டார்.

ஆனந்த கண்ணீரில் மூழ்கிய ரோஹித் ஷர்மாவின் மனைவி எழுந்து நின்று முத்தத்தை சுவீகரித்ததோடு சாதனைக்கு கௌரவத்தினையும் வௌிக்கொணர்ந்தார்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்