இலங்கை ரசிகர்களை பெருமைப்பட வைத்த வீரன் டில்சான்: ஒரு வரலாற்றுப் பார்வை!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை ரசிகர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர். “டில்ஸ்கூப்” முறை துடுப்பாட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இலங்கை அணியின் ஆரம்பவீரராகவும் அணித்தலைவராகவும் கடந்த காலங்களில் செயற்பட்ட தில்ஷானை பற்றிய ஆய்வுகளுடனே இக்கட்டுரை நகரவுள்ளது.

1976/08/14 அன்று பிறந்த திலகரத்னே தில்ஷன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அறிமுகத்தினை சிம்பாப்பேக்கு எதிராக ஒரே தொடரில் வழங்கினார். இந்த அறிமுகத்தை 1999 இல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கை சார்பில் நான்காவது வீரராகவும் ஒட்டுமொத்தமாக பதினோராவது வீரராகவும் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களைக்கடந்தார். இலங்கை சார்பில் முதலாவது வீரராகவும் ஒட்டுமொத்தத்தில் மூன்றாவது வீரராகவும் இருபது இருபது போட்டிகளில் 1500 ஓட்டங்களைக்கடந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது முதலாவது வீரராக இருபது இருபது போட்டிகளில் இருநூறு பவுண்டரிகளையும் விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாது நான்கு தடவைகள் ஒரு நாள் போட்டிகளில் ஆண்டு நிறைவில் ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் மற்றும் இருபது இருபது போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆகஸ்ட் 28 அன்று ஒருநாள் போட்டிகளில் இருந்தும் செப்டெம்பர் ஒன்பதாம் திகதி இருபது இருபது போட்டியிலிருந்தும் இருந்து விடைபெற்றார்.

2011 ஆண்டு உலக கிண்ணத்தை எடுத்து நோக்கினால், திலகரத்னே தில்ஷன் தான் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக உள்ளார். இவர் ஒன்பது போட்டிகளில் ஆடி 500 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சிம்பாப்பேக்கு எதிராக 144 ஓட்டங்களைப் பெற்றமையே அத்தொடரின் அதிகபட்ச ஓட்டமாகும்.

அதுமட்டுமல்லாது இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தரங்கவுடன் சேர்ந்து தில்ஷன் பெற்ற இரட்டை சத இணைப்பாட்டம் என்றும் மறந்துவிட இயலாது இலங்கை ரசிகர்களால். இத்தொடரில் இவர் இரண்டு சதங்களையும் இரு அரைச்சதங்களையும் அடித்துள்ளார்.

இந்த உலககிண்ணம் முடிந்த கையோடு சங்கா தலைமைப் பதவியிலிருந்து விலக தில்ஷன் தலைமைப்பதவியை ஏற்றார்.

2011 ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அணி தென்னாபிரிக்காவை முதல் முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது. அந்த டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கியவர் தில்ஷன் என்பது முக்கிய விடயம். இதுவே தில்ஷனுக்கு கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றியும் ஆகும். எனினும் இத்தொடரில் இலங்கை தோல்வியுற்றது. இதன்பின்பு 2012 இல் இலங்கை அணியின் தலைமைப்பொறுப்பு மஹேலவிடன் போனது.

16/12/2014 ஆம் ஆண்டு தனது முந்நூறாவது ஒருநாள் ஒருநாள் போட்டியில் ஆடிய தில்ஷன் அப்போட்டியில் தனது பதினெட்டாவது சதத்தை அன்றைய போட்டியில் நிறைவு செய்தார். அதுமட்டுமல்லாது அன்றைய போட்டியில் 9000 ஒருநாள் ஓட்டங்ளையும் நிறைவு செய்தார்.

23/01/2015 இல் இருபதாவது சதத்தினை தில்ஷன் நிறைவு செய்தார்.

இங்கிலாந்தின் பிரபலமான லோட்ஸ் மைதானத்தில் இலங்கை சார்பில் அதிக ஓட்டங்களை பதிந்தவர் இவரே. இச்சம்பவம் 2013 இல் இடம்பெற்றது. இப்போட்டியில் தில்ஷன் 193 ஓட்டங்களைப் பெற்றார்.

அதுமட்டுமலலாது அதிகபட்ச நான்காவது விக்கெட் இணைப்பாட்டமான 280 இனை சமரவீராவுடன் சேர்ந்து டெஸ்ட் போட்டியில் நிறைவேற்றினார்.

இலங்கை சார்பில் இரண்டாவது வீரராக ஒருநாள் போட்டிகளில் 150 இற்கும் அதிகமான ஓட்டங்களை மூன்று தடவைகள் பெற்றுள்ளார்.

எந்த வித ஆறு ஓட்டங்களையும் பெறாமல் 22 நான்கு ஓட்டங்களின துணையுடன் ஒருநாள் போட்டிகளில் 161 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இச்சாதனையை வோர்ணர் 24 நான்கு ஓட்டங்களின் துணையுடன் முறியடித்தார்.

அதுமட்டுமல்லாது முப்பத்தைந்து வயதுகளை கடந்த பின்னர் 4674 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஆரம்பவீரராக வந்து அதிக ஓட்டங்கை ஒரே ஆண்டில் பெற்ற முதலாவது இலங்கையின் வீரர் இவராவார்.

அதுமட்டுமல்லாது தலைவராக அனைத்துவகையான போட்டியிலும் சதத்யையும் கடந்துள்ளார்.

இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய தில்ஷன் 5492 ஓட்டங்களை சராசரி 40.99 இல் பெற்றுள்ளார். அதிகபட்சம் 193 ஆகும். இதில் 23 அரைச்சதங்களும் பதினாறு சதங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாது 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

330 ஒருநாள் போட்டிகளிலாடிய தில்ஷன் 10290 ஓட்டங்களை சராசரி 39.27 இல் பெற்றுள்ளார். அதிகபட்சம் 161 ஆகும். இதில் நாற்பத்தேழு அரைச்சதங்களும் இருபத்தியிரண்டு சதங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாது 106 ஒருநாள் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை 80 இருபது இருபது போட்டிகளிலாடிய தில்ஷன் 1889 ஓட்டங்களை சராசரி 28.19 இல் பெற்றுள்ளார். இதில் பதின்மூன்று அரைச்சதங்களும் ரு சதமும் அடங்கும். அதுமட்டு ஒன்பது விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்