இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா உலக சாதனை!

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்துள்ளார், இது அவரது 16வது சதம் ஆகும்.

தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இன்றைய இரண்டாவது போட்டியில், இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது, துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும், அபாரமாக விளையாடி 208 ஓட்டங்கள் குவித்தார்.

இதனை நேரில் பார்த்த மனைவி அவரது ரித்திகா சஜ்தேவ் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

இதற்கு முன்பாக 2013-ம் ஆண்டு அவுஸ்திரேலியா, 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இரட்டை சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்