கெத்தாக வெற்றியை ருசித்த இந்தியா: தனி ஆளாக போராடிய மேத்தீவ்ஸ்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், மொகாலியில் இன்று தொடங்கியுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, இந்தியாவை துடுப்பாட்டம் செய்ய பணித்தது.

தொடரை வெல்ல வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 208, தவான் 68, சிரேயாஸ் ஐய்யர் 88 என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 392 ஓட்டங்களை குவித்தது.

ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 153 பந்தில் 12 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் விளாசி 208 ஓட்டங்களை குவித்தார்.

இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குவிக்கும் 3வது இரட்டை சதம் இதுவாகும்

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு மேத்தீவ்ஸ் சதம் (111*) அடித்து தனி ஆளாக போராடினார். எஞ்சிய வீரர்கள் குறிப்பிடும் வகையில் சோபிக்காததால் இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து இந்தியா 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தியா தொடரை 1-1 என சம நிலை செய்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்