வாழ்வா..சாவா? நிலையில் இந்தியா: தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை

Report Print Santhan in கிரிக்கெட்

மொஹாலியில் இன்று நடைபெறும் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் உள்ளதால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது, இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி விஸ்வரூபம் எடுத்து இந்திய அணியை கதற வைத்தது.

டோனியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கை பந்து வீச்சாளர்களிடம் சரண் அடைந்தனர். இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற உள்ளது.

சொந்த மண்ணில் விளையாடுவதால், இந்திய அணி தொடரை இழக்க கூடாது என்ற நினைப்பில் விளையாடும், அதுமட்டுமின்றி இந்திய அணிக்கு இன்றைய போட்டி வாழ்வா? சாவா? போட்டி தான், அதே வகையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால், தொடரை வென்று டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு தகுந்த பதிலடியாக இருக்கும்.

முதல் போட்டியில் அசத்திய இலங்கை வீரர் லக்மல் இப்போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கை அணிக்கு பின்னடைவு தான், இருப்பினும் மொஹாலி மைதானமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் போட்டியில் ஜொலித்தது போலவே இப்போட்டியிலும் ஜொலிக்கலாம்.

இரு அணிகள் மோதும் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு துவங்கவுள்ளது, அதே சமயம் மொஹாலியில் தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால், போட்டி நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்