இந்த இரண்டு பேரில் யாரை தேர்வு செய்வது? மண்டையை பிய்த்து கொள்ளும் கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்
777Shares

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தேர்வாகியுள்ளதால் கோஹ்லிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் விளையாடி வருகிறது. இத்தொடர் முடிந்த பின்பு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு பறக்கிறது.

அங்கு 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் பங்கேற்கவுள்ளது. சொந்த மண்ணில் சுலபமாக வெற்றியை குவித்து வரும் இந்திய அணிக்கு, உண்மையான சோதனை தென் ஆப்ரிக்க மண்ணில் தான் காத்திருக்கிறது.

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மாவும் தேர்வாகியுள்ளார், ஹார்திக் பாண்ட்யாவும் தேர்வாகியுள்ளார்.

இது தான் கோஹ்லிக்கு தற்போது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், நான்கு பந்து வீச்சாளர்களுடன் ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் 8-வது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்தி, பந்து வீச்சிலும் கைகொடுத்து வருகிறார் பாண்ட்யா.

அதே போன்று ரோகித் சர்மாவும் தற்போது சூப்பர் பார்மில் உள்ளதால் நிச்சயம் அவரது அனுபவம் தென் ஆப்ரிக்காவில் தேவைப்படும். இதனால் கோஹ்லிக்கு யாரை தேர்வு செய்வதில் என்பதில் நிச்சயம் குழப்பம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்