இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளராக சண்டிகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் சண்டிகா ஹதுருசிங்கா. இவரது தலைமையில் வங்காள தேச அணி சிறப்பாக செயல்பட்டது.
ஹதுருசிங்கா கடந்த அக்டோபர் மாதம் வங்காள தேச தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின் இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சண்டிகா ஹத்துருசிங்காவை நியமிக்க போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின, இந்நிலையில் ஹதுருசிங்கா இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடங்கள் செயல்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.