இந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷ வீரரான விராட் கோஹ்லியை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று பலமுறை கூறப்பட்டது. இந்நிலையில் அனுஷ்காவும் அவரது குடும்பமும் மும்பை சத்ரபதி விமானத்திலிருந்து சுவிஸ்க்கு கிளம்பியுள்ளனர்.
கோஹ்லியும் டெல்லியிலிருந்து கிளம்பியுள்ளார். இருவரும் மீடியாவின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் கிளம்பியுள்ளனர்.
இதனால் சுவிட்சர்லாந்தில் இத்தாலியன் முறைப்படி திருமணம் செய்யவிருக்கின்றனர் என பாலிவுட் ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.