இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, யாகூ இணையதளத்தில் அதிகம் தேடப்படும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி அணித்தலைவராக இருந்தபோது, கூகுள் மற்றும் யாகூ இணையதளங்களில் அதிகம் தேடப்படும் விளையாட்டு வீரராக இருந்தார்.
தற்போது இந்திய அணியின் தலைவராக இருக்கும் விராட் கோஹ்லி, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி, இலங்கைக்கு எதிரான தொடரில் மட்டும் 610 ஒட்டங்கள் குவித்து அசத்தினார்.
மேலும், ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா உடன் திருமணம் போன்ற செய்திகளும் அவரை இன்னும் பிரபலமாக்கியது.
இதனால், யாகூ இணைய தளத்தில் அதிகம் தேடப்படும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த டோனியை முந்தியுள்ளார் விராட் கோஹ்லி.