இலங்கை வீரரை டுவிட்டரில் தெறிக்கவிட்ட இந்திய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
540Shares

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்டு போட்ட டுவீட்டுக்கு விவிஎஸ் லட்சுமணன் கிண்டலாக பதில் டுவீட் செய்துள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஞாயிறு அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இலங்கை முன்னாள் வீரர் அர்னால்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் டெஸ்ட் தொடர் 1-0 என்ற கணக்கில் முடிந்துவிட்டது, ஆனால் வரவிருக்கும் ஒருநாள் தொடர் சில மாதங்களுக்கு முன்பு போல 5-0 என்ற கணக்கில் முடியாது என்பதை உறுதியாக கூறி கொள்கிறேன் என பதிவிட்டார்.

இதற்கு பதில் பதிவு செய்த இந்திய அணியின் முன்னாள் வீர லட்சுமணன், நிச்சயமாக ருசல், 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் அப்படி முடிய வாய்ப்பே இல்லை. இந்த கணிப்பு நிச்சயமாக பொய்யாகாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்