ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு: முதல் முறையாக டாப் 10-ல் நுழைந்தார் சண்டிமால்!

Report Print Raju Raju in கிரிக்கெட்
466Shares

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸிமித் முதலிடத்தில் உள்ளார்.

ஐந்தாவது இடத்தில் இருந்த இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி சமீபத்திய இலங்கை தொடரில் 610 ஓட்டங்கள் குவித்த நிலையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதே தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு 366 ஒட்டங்கள் எடுத்த இலங்கை அணி தலைவர் தினேஷ் சண்டிமால் முதல் முறையாக டாப் 10-ல் நுழைந்துள்ளார்.

அவருக்கு பட்டியலில் ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.

பந்து வீச்சாளர்களை பொருத்தவரையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்தில் உள்ளனர்.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத்துக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணிக்கு ஒரு புள்ளி குறைந்தாலும் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இலங்கைக்கு பட்டியலில் ஆறாவது இடம் கிடைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்