அடுத்த வருடம் என்னுடைய சாதனையை இவர் முறியடிக்க வாய்ப்பிருக்கு..அடித்து சொல்லும் சங்ககாரா

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா என்னுடைய சாதனையை அடுத்த வருடம் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி முறியடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறது. இதனால் இந்த குறுகிய காலக்கட்டத்திலே கோஹ்லி, பல அணித் தலைவர்களின் சாதனையை முறியடித்துவிட்டார்.

அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக் கேப்டன் என்றழைக்கப்படும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை, கோஹ்லி முறியடித்தார், இப்படி தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வரும், விராட் கோஹ்லி, தன்னுடைய சாதனையை அடுத்த வருடம் முறியடிக்கலாம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய சாதனையை முறியடிக்க விராட் கோஹ்லி நீண்ட ஆண்டுகள் எடுப்பார் என்று நினைக்கவில்லை. அடுத்த வருடம் என்னுடைய சாதனையை அவர் முறியடிக்கலாம். அதன்பின் மீண்டும் என்னைவிட அதிக ஓட்டங்கள் சேர்ப்பார். விராட் கோஹ்லி ஒரு மாறுபட்ட கிளாஸ் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...